முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 11,12 ஆகிய தேதிகளில் சேலம் மற்றும் ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று, களஆய்வு மேற்கொள்கிறார்
11 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் வேளான் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். 12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆணையை பாசன வசதிக்காக திறந்து வைக்கிறார்
சட்டமன்ற தேர்தல் வரையறுக்கக் கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். அந்த வகையில் வரும் 11, 12 ஆகிய தேதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு சென்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இதற்காக 11 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு செல்லும் முதலமைச்சர் ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து 12 ஆம் தேதி சேலம் செல்லும் முதலமைச்சர் மேட்டூர் அணையை விவசாயிகளுக்கும் மற்றும் நீர் பாசனத்திற்காக திறந்து வைக்கிறார். மேலும், இந்த இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார்.
