தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய், இன்று தனது முதல் அரசுமுறைப் பயணமாக சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராகப் பெரியாரை விஜய் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, கி. வீரமணி, அவருக்குப் பெரியார் தொடர்பான புத்தகங்களை நினைவுப் பரிசாக வழங்கினார். பிரசாரத்தின்போது விஜய்யை வீரமணி கடுமையாக விமர்சித்த நிலையில், இச்சந்திப்பு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version