கோவை அருகே கண்ணம்பாளையம் பகுதியில் வீடுகளில் உலரப் போடப்பட்டிருந்த உள்ளாடைகள் திருடப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் இந்த துணிகளைத் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் வீடுகளுக்கு வந்து துணிகளைத் திருடிச் செல்வது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நபரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version