விபத்தில் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிக்கு தீர்ப்பாய உத்தரவின் படி இழப்பீட்டை வழங்காத தனியார் நிறுவன மேலாண் இயக்குனரை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குத்துாஸ் மொகைதீன், கடந்த 2007ம் ஆண்டு மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள ஏ.வி., பாலத்தின் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே வந்த ‘ஜீப்’, குத்தூஸ் மொகைதீன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

விபத்தில் தனக்கு ஏற்பட்ட படுகாயத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, மதுரை மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், கடந்த 2009ல் குத்துாஸ் மொகைதீன் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி,” விபத்தில் மனுதாரருக்கு 60% அளவுக்கு ஊனம் ஏற்பட்டுள்ளது. கூலி தொழிலாளியான அவர் வருவாயை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. விபத்துக்கு வாகன டிரைவரின் அலட்சியம், அஜாக்கிரதை மற்றும் அதிவேகமே காரணம்.
எனவே, மனுதாரருக்கு வாகனத்தின் உரிமையாளரான ஸ்ரீ லட்சுமி சரஸ்வதி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம், 4 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என கடந்த 2017ல் உத்தரவிட்டார்

இந்த உத்தரவின்படி, இழப்பீட்டு தொகையை உரிய காலத்தில் வழங்கவில்லை என கூறி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், குத்துாஸ் மொகைதீன் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம்,’ இழப்பீட்டை வழங்காத தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளிட்டோரை வரும் ஜூலை 14ம் தேதிக்குள் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version