2026 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைத்தால் தேர்தல் களம் கடும் போட்டியாக மாறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சிபிஎம் கடந்த தேர்தலை ஒப்பிடும் போது இந்த முறை அதிக தொகுதிகளை கோரும் என தெரிவித்துள்ள சண்முகம்.
முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மாநில முதலாளித்துவக் கட்சியாக திமுகவை சிபிஎம் கருதுகிறது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை காலத்திலிருந்தே இந்தக் கருத்தை சிபிஎம் கொண்டுள்ளோம். திமுகவின் முக்கிய குணம் மாறவில்லை.
திராவிட மாடல் அனைவரையும் உள்ளடக்கியது என்று முதல்வர் ஸ்டாலின் கூறிவருவதாகவும் ஆனால் அது நிறைவேறிவிட்டதா? என்ற கேள்வியை சண்முகம் எழுப்பியுள்ளார்.
சிவகங்கை லாக் அப் மரணம் குறித்தான கேள்விக்கு … திமுக ஆட்சி பொறுப்பு வந்த பிறகு 24 என் கவுண்டர் நடந்துள்ளதாகவும். தேர்தல் நேரத்தில் திமுக இதற்கு பதிலளிக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் மனித உரிமை மீறல்களை சிபிஎம் எப்போதும் ஏற்றுக்கொள்ளாது.