கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கமான காய்கறி மற்றும் பாரம்பரியப் பயிர்கள் சாகுபடியில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால், தற்போது விவசாயிகள் அரபு நாடுகளைச் சேர்ந்த பேரிச்சை சாகுபடி மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகிலுள்ள தவளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், முன்பு தக்காளி, நெல், வாழை போன்ற பயிர்களைப் பயிரிட்டு வந்த நிலையில், எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் நண்பரின் ஆலோசனையைப் பெற்று அரபு நாட்டிலிருந்து பேரிச்சை செடிகளை வாங்கி தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்தார்.

மூன்றாவது ஆண்டில் இருந்து அறுவடை செய்யப்பட்டு வரும் இந்தப் பேரிச்சை மரங்களில், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொத்து கொத்தாக விளைச்சல் அதிகரித்துள்ளதுடன், ஒவ்வொரு குலையிலும் 10 முதல் 20 கிலோ வரை பழங்கள் காய்த்துள்ளன. தற்போது பழங்கள் அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், பல்வேறு இடங்களிலிருந்து வரும் வியாபாரிகள் நேரில் வந்து ஒரு கிலோ ரூ.200 விலைக்குக் கொள்முதல் செய்யத் தயாராக இருப்பதால் குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக விவசாயி ஈஸ்வரன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version