விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனது துரதிருஷ்டவசமான விஷயம் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் விவகாரத்தில் பலரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸும் தனது குரலை கொடுத்துள்ளார்.  மத்திய அரசு, தனது அதிகார பலத்தை கொண்டு எல்லோரையும் அடிபணிய வைக்க நினைக்கிறார்கள். விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதால், அரசியல் சூழ்ச்சிக்காக அவரை அடிபணிய வைக்க தணிக்கை குழுவை மத்திய அரசு பயன்படுத்துகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் நிலவுகிறது. நடிகர் விஜய்யை நிர்பந்தப்படுத்த நினைக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவராக விஜய் படத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலான சூழலில் நானும், தென்னிந்திய நடிகர் சங்கமும் துணை நிற்கும். முதல்வர் ஸ்டாலின் சொன்ன கருத்து தான் என்னுடையதும். அவர் சொல்வது போல முழுக்க முழுக்க திட்டமிட்டு மத்திய அரசு தன்னிடம் இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு எல்லாரையும் அடிபணிய வைக்க நினைக்கிறாங்க..

அங்க தொட்டு, இங்க தொட்டு திருப்பரங்குன்ற சாமியை தொட்டு இப்போ விஜய்யை நிர்பந்தப் படுத்த நினைக்கிறாங்க.. இத நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர்களின் அடையாளம் மறைக்கப்பட வேண்டும், மத ரீதியாக மக்களை பிரிவினை செய்து ஆரிய சமூக மக்கள் முன்னேற வேண்டும் என நினைத்து மத்திய அரசு திட்டமிட்டு செய்யக்கூடிய செயலாகவே பார்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version