கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடந்த தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மேடையில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன், அடுத்த தலைமுறை கட்சியின் தலைவர்களாக தங்களை அங்கீகரிக்கவில்லை என்று பேசியுள்ளார்.

மேடையில் தொண்டர்களின் ஆரவாத்திற்கு இடையே பேசிய விஜயபிரபாகரன், “எல்லாத்தையும் எதிர்த்து தான் அரசியல் பண்ண முடியும் புரோ. எங்க எது நடந்தாலும் முதல்ல தேமுதிகவை தான் குறை சொல்லுவாங்க. அடுத்த தலைமுறை தலைமுறைகளில் உதயநிதி சார், அண்ணாமலை அவர்கள், சீமான் அண்ணா, விஜய் சார போடுறாங்க. சந்தோஷம், நாங்க வரவேற்கிறோம். அனால், விஜய பிரபாகரனை போடவில்லை. ஏன் என் போட்டோவை போடவில்லை என்று கேட்கவில்லை. அவர்கள் அவர்களோட உரிமைக்காக பேசாறாங்க. ஆனால் மக்கள் உரிமைக்காக போராடும் தேமுதிகவையும், விஜய பிரபாகரனையும் போடவில்லை. ஏன் நாங்கள் வந்தால் உங்களுக்கு பிரச்சனையாகும் என்று பயமா.. பயம் என்றால் சொல்லிடுங்க.

தேமுதிக எதிர் நீச்சல் போட்டே வளர்ந்த கட்சி. கேப்டனுக்காக குரு பூஜை நடத்தியதை கூட விமர்சித்தார்கள். எதுக்கு இவனுங்க பேசறதுக்கு எல்லாம் பதில் சொல்லனும்னு நாங்க கடந்து போயிட்டோம். குரு பூஜை என்பது இருள் நீக்குதல் என்று பொருள். கேப்டன் எனக்கு பிதா. அவர் தொண்டர்களுக்கு அவர் பிதா, குரு, மாதா. ஒளியாக இருக்கும் அவருக்கு குரு பூஜை நடத்தப்பட்டது.

உங்களை போல தான் நானும் கூட்டணிக்காக காத்திருக்கிறேன். அம்மா, பையன் வேறு. கட்சி வேறு. நான் ஒரு இளைஞரணி தலைவராக கட்சிக்காக தான் சிந்திப்பேன். துரோகத்தை பார்த்துவிட்டோம். கண்டிப்பாக முரசு சின்னத்தில் நின்று தேமுதிக வெற்றி பெற்றால் தான் நமக்கான தேவையை கேட்க முடியும்.

மாநாட்டுக்கு முன்னாடி கோயிலில் தேங்காய் உடைத்த போது கரெக்டாக ரெண்டாக பிளந்தது. இதுல இருந்து இரண்டு பெரிய கட்சிக்கும் தேமுதிகவின் தேவையும், சேவையும் வேண்டும். தேமுதிகவுக்கு எத்தனை சீட் நீங்க தறீங்களோ அத்தனை சீட்டு தான் உங்களை ஆட்சியில் உட்கார வைக்கும். தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அதுதான் வலுவான கூட்டணி” என பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version