தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களின் உட்கொண்டதில் சாம்பாரில் பள்ளி இருந்ததாக கூறி நான்கு மாணவர்கள் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அதன் சுற்றியுள்ள அரசு பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது இங்கு வழங்கப்படும் உணவு அனைத்தும் காங்கேயத்தில் தயார் செய்து அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் உணவு பரிமாறப்படும் உணவு கொண்டு வரும் ஊழியர்கள் தாராபுரம் அடுத்த கொழிஞ்சிவாடி பள்ளிக்கு உணவு வழங்கிவிட்டு மற்ற பள்ளிகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பொழுது அங்கிருந்து கொண்டு வந்த சாம்பாரில்
பல்லி இறந்து உள்ளதை பார்த்த ஆசிரியர்கள் உடனே சாப்பிட்ட மாணவர்களை தாராபுரம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.