வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக காங்கிரஸ் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது, இந்த பேச்சு வார்த்தையில் திமுக துணை பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி மற்றும் காங்கிரஸ் மேலிட பெறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் சார்பில் 39 தொகுதி மற்றும் 6 அமைச்சர்கள் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது, இதற்கு திமுக சார்பில் 30 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடதந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் 36 தொகுதி மற்றும் 3 அமைச்சர்கள் என்பதில் காங்கிரஸ் தலைமை உறுதியாக உள்ளதாக கனிமொழியிடம் காங்கிரஸ் தரப்பில் கிரிஷ் சேடங்கர் தெரிவித்ததாக தெரிகிறது.
