திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, விருப்பமனு விநியோகம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், 12 பேர் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கடந்த 17ம் தேதி அறிவிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுநலச் சங்கங்கள் – வணிக அமைப்புகள் – இளைஞர்கள் – விவசாய அமைப்புகள் – தொழிலாளர் அமைப்புகள் – தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்தகுழுவில், அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன் மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் , மருத்துவர் எழிலன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதில் தேர்தலுக்கான வாக்குறுதிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது. முதற்கட்ட ஆலோசனையை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் இந்த குழு திட்டமிட்டுள்ளது. பல கவர்ச்சி அறிக்கை இந்த ஆண்டு தயாரிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version