கோவையில் பொது இடத்தில் , தொலைத்து விடுவேன் உன்னை , சட்டையை கழற்றி விடுவேன் , என காவல் உதவி ஆய்வாளரை திமுக நிர்வாகி கோட்டை அப்பாஸ் மிரட்டிய வீடியோ வைரல் ஆனது.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கோவை வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக அதிமுகவினர் சார்பில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது.

அதில் கோவை டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் அருகே அதிமுகவினரின் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் அதிமுகவினரின் பேனரை அங்கிருந்து திமுகவினர் அப்புறப்படுத்தியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே அங்கு சமாதான பேச்சு வார்த்தையில் காவல் துறையினர் ஈடுபட்ட நிலையில் திடீரென அங்கு வந்த திமுக மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ் சீருடையில் இருந்த காவல் உதவி ஆய்வாளரிடம் கடும் கோபத்துடன் ” திமுகவினர் என்ன பைத்தியக்காரனா என்றும் நீ என்ன ரவுடியா உன் சட்டையை கழட்டாமல் விடமாட்டேன்” என்று காவல் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசியதுடன் அவருக்கு கடுமையான வார்த்தைகளால் நேரடி மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து திமுகவினர் அப்பகுதியில் சிறிது நேரம் மறியலிலும் ஈடுபட்டனர். சப்இன்ஸ்பெக்டரை திமுக நிர்வாகி மிரட்டும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version