தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் இடையே சலசலப்பு நீடித்து வருகின்றது. இந்தநிலையில், இன்று சட்டசபையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்லபெருந்தகை ‘தொழிற்சாலை அதிகம் உள்ள திருப்பெரும்புதூர் தொகுதியில் பல சாலைகள் பழுதடைந்துள்ளது. 2வது முறை நீங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டாலும், தேர்தலுக்கு முன்பாக பழுதடைந்த சாலைகலை பழுது பார்த்து கொடுங்கள்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, “செல்வப்பெருந்தகையின் கோரிக்கை நியாயமானவை. எந்தெந்த சாலைகள் என்று முறைப்படி கடிதம் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், அடுத்த நிதியாண்டில் செய்து கொடுக்கிறோம்” என்றார்.

