தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் திரையரங்குகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 9, 2026) முழுத் திரைப்படமும் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்தது படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.
தொடர்ந்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜனநாயகன்படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பி வைத்தது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் ஏப்ரல் 30ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் தனது ஜனநாயகன் படத்திற்கு ஆளும் தரப்பு பிரச்சனை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் படத்தில் விஜய்யின்அறிமுகம் மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்தது. சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக முழு படமும் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதைத்தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் கசிந்த காட்சிகள் மற்றும் படத்தின் லிங்கை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.
