போதை பொருள் விற்பனை செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீ கிருஷ்ணா ஆஜர்
போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜரானார்.
கடந்த சில மாதங்களுக்கி முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் கிருஷ்ணா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வந்த கிருஷ்ணா கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கிருஷ்ணா ஆஜரானார்.
இதேபோல் போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த புகாரில் ஸ்ரீகாந்த் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
