உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம்பெற பிராத்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபயணத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அப்பலோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் பூரண குண்மடைய வேண்டும் என என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிராத்திப்பதாக” தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version