மதுரை ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்தவர் செல்வி இவர் ஜெய் ஹிந்த்புரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பழனியை சேர்ந்த ஸ்ரீ நேசா தொண்டு நிறுவனத்தின் அட்மின் சக்திவேல் என்பவர் செல்வி மூதாட்டிக்கு அறிமுகமானார். அவர் மூதாட்டி செல்வியிடம் நேஷா தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் செந்தில்குமாரை அறிமுகப்படுத்தினார்.
செந்தில்குமார் பழனியில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் பெண்களின் வளர்ச்சிக்காக தொழில் சார்ந்த சேவை செய்வது வருவதாகவும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக பணம் கொடுத்தால் அதற்கு மாதம் மாதம் இரண்டு சதவீதம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். செந்தில்குமார் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய மூதாட்டி செல்வி தன்னிடம் இருந்த தங்க நகைகளை தேசிய வங்கியில் அடமானமாக வைத்தும், வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த பணம் மற்றும் கடனாக பெற்று 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக செலுத்தி உள்ளார்.
தான் கொடுத்த பணத்திற்கு 20 மற்றும் 50 ரூபாய் மதிப்புள்ள அரசு முத்திரைத்தாளில் தன்னிடம் வாங்கிய தொகையை எழுதி பூர்த்தி செய்து கையொப்பமிட்டு செந்தில்குமார் கொடுத்துள்ளார். வாங்கின பணத்திற்கு அடமான பத்திரம் கொடுத்ததை உண்மை என நம்பிய மூதாட்டி செல்வி தனக்கு மாதம் வட்டி தொகை வரும் என நம்பிக் கொண்டிருந்தார்.
அதன்படி இரண்டு மாதம் ரூ 55,000 வீதம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வட்டி பணத்தை செந்தில்குமார் மூதாட்டி செல்விக்கு கொடுத்துள்ளார். கடந்த 15 மாதங்களுக்கு மேலாக வட்டி பணம் செந்தில்குமார் கொடுக்கவில்லை. இது தொடர்பாக செந்தில்குமாரின் செல்போன் எண்ணை மூதாட்டி செல்வி தொடர்பு கொண்டார் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது இதனை அடுத்து பழனிக்கு நேரில் சென்ற மூதாட்டி செல்வி ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் பூட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனிடையே நிறுவனர் செந்தில்குமார் அவரது தாயார் தனலட்சுமி அறிமுகம் படுத்திய சக்திவேல் ஆகியோர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில்குமாரின் உறவினரான ஆடலுரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் ஸ்ரீ நேஷா தொண்டு நிறுவனர் செந்தில்குமாரிடமிருந்து பணத்தை வாங்கித் தருவதாக கூறினார் ஆனால் இதுவரை ரூ.27,50,000 வாங்கித் தரவில்லை. ஆடலூர் ராமமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மூதாட்டி செல்வி திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப்பை நேரில் சந்தித்து தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மோசடி செய்த பணத்தை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். தற்பொழுது ஒரு வேளை சாப்பாட்டிற்கு மூதாட்டி செல்வி கஷ்டப்பட்டு வருவதாக தெரிவித்தார். செந்தில்குமார் இதுபோல் பலரிடமும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது
