2026 தமிழக சட்டசபைத் தேர்தல் களம் இன்று சூடுபிடித்துள்ள நிலையில், சாமானிய மக்களோடு இணைந்து திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். இன்று காலை முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற பிரபலங்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னணி இயக்குநர் அட்லீ மற்றும் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் தனித்தனியாகத் தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களித்தனர். நட்சத்திரத் தம்பதிகளான சினேகா மற்றும் பிரசன்னா ஆகியோர் இணைந்து வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதேபோல், மூத்த நடிகர் பிரபு தனது குடும்ப உறுப்பினர்களுடன் வந்து வாக்களித்த நிலையில், நடிகர் விக்ரம் வழக்கம் போல தனது தனித்துவமான ஸ்டைலில் வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். குடும்பத்துடன் வருகை தந்து சரத்குமார், ராதிகா சரத்குமார் வாக்கு செலுத்தினர்.

நடிகர் தனுஷ் தனது வாக்கினைப் பதிவு செய்ததோடு, இயக்குநர் அமீர் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக உரிமையை நிலைநாட்டினார். பிக் பாஸ் பிரபலம் ஆரவ், நடிகர் ஜெய், நடிகர் மற்றும் இயக்குநரான ஆர்ஜே பாலாஜி,  சிவகார்த்திகேயன் ஆகியோரும் காலையிலேயே வாக்களித்தனர். மேலும், நடிகர் கருணாஸின் மகனும் நடிகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்தாருடன் வந்து வாக்குகளைப் பதிவு செய்தார். திரைத்துறையினரின் இந்த வருகை, இளைஞர்களிடையே வாக்குப்பதிவு குறித்த ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version