சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தமிழக அரசு புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகரில் கார்பன் உமிழ்வை குறைத்து காற்றின் தரத்தை உயர்த்தும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத 120 புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதற்கட்டமாக கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னை வியாசர்பாடி பணிமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் சென்னை மாநகரத்தில் இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 28 ஆம் தேதி வரை ஒரே மாதத்தில் 12.80 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த 120 மின்சார பேருந்துகள் 6 இலட்சத்து 55 ஆயிரம் கிலோமீட்டர் வரை இயக்கப்பட்டுள்ளது. 120 மின்சார பேருந்துகள் இல்லாமல் டீசல் பேருந்துகளை இந்த ஒரு மாதத்தில் பயன்படுத்தினால் அரசுக்கு 1 கோடியே 60 லட்சம் செலவாகி இருக்கும்.

ஆனால் இந்த மின்சார பேருந்துகளை இயக்கியதன் மூலம் 70 லட்சம் செலவாகியுள்ளது இதனால் அரசிற்கு 90 லட்சம் மிச்சம் ஆகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version