நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நாளை பதில் அளிக்கப்படும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தன் வீட்டில் இருந்து மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார் .
இதனிடையே தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் அனைத்து கேள்விகளுக்கும் நாளை சென்னையில் உரிய பதில் அளிக்கப்படும் என தெரிவித்துச் சென்றுள்ளார் .
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்ட நிலையில் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை,
இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ பன்னீர்செல்வம் தொடர்கிறாரா என்று கேள்வி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பாரா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில் இவை அனைத்திற்கும் நாளை சென்னையில் பதில் அளிக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார்.
அடுத்த மாதம் மதுரையில் த.வெ.க சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் செப்டம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தலைமையில் மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
