தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை முதல் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-ல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 4.8சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில், ”கடன் உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், இதை செய்தால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகள் குறித்து ”முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்படும் எனவும், இது குறித்தான அறிவிப்பு ஜூலை 1-க்குள் அறிவிக்கப்படும்” எனவும் மின்வாரியத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version