கடலூர் மாவட்டத்தில் ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது மீன்பிடித் தடைக்காலம் நிலவுவதால், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சி.புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ், மனோகர் மற்றும் புதுவை மாநிலத்தை செரெந்த நாகவேல் ஆகியோர் கடந்த 2-ம் தேதி மதியம் 2.30மணியளவில் புதுப்பேட்டையை சேர்ந்த வீரவேல் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

மறுநாளே அவர்கள் கரைக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரைக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சக மீனவர்கள், படகில் தேடிச் சென்றும் அவர்களை கண்டறியமுடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மீனவ கிராம மக்கள் அன்னங்கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மீனவதுறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து கடலோர காவல் படை மூலம் மாயமானவர்களை தேடி வருவதாகவும், தெரிவித்தனர். விரைவில் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version