திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் நான்கு வழித்தடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் இலவசமாக பயணிப்பதற்காக புதிய பேருந்து திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இணைந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம். காலை மாலை என இரண்டு வேளைகளில் இந்த பேருந்துகள் இயங்கும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமணி தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார்.
சென்னையில் மட்டுமே இயங்கி வந்த இந்த மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து சேவை இன்று திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உறுதி அளித்திருக்கிறார்.
பள்ளிப் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் பயணிக்கும் வகையிலான இந்த இலவச பேருந்து சேவையின் மூலம் மாணவ மாணவிகள் நல்ல பயன் பெறுவார்கள். இதற்கு முன்பு பொது பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் கூட்ட நெரிசலில் சிக்கி, உட்கார இடம் இல்லாமல் நின்று கொண்டு சில சமயங்களில் படியில் தொங்கிக் கொண்டு கூட பள்ளிக்குச் செல்வதை நாம் நிறைய பார்த்திருக்கிறோம்.இனி மாணவ மாணவிகள் எந்தவித சிரமமின்றி பள்ளிக்குச் செல்வார்கள்.
இந்தத் திட்டம் கூடிய விரைவில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் செயல்பாட்டிற்கு வரும் என்று நம்புவோம்.
