15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கியாஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் வரும் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பு மையங்களுக்கு எல்.பி.ஜி கேஸை கொண்டு செல்லும் லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சுங்கக் கட்டணத் தொகையை வழங்குவது, வாடகை உயர்வு, மற்றும் புதிய டெண்டர் விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் முன்வைத்தனர்.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் லாரி உரிமையாளர்கள் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் வரும் 1-ம் தேதி முதல் இந்தியன் ஆயில் நிறுவன சமையல் கியாஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் 1,000லாரிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.34கோடி இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கியால் சிலிண்டர் லாரிகள் வேலை நிறுத்த அறிவிப்பால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version