சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.12) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.11) ரூ.96,400க்கு விற்பனையான நிலையில், இன்றும் ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.160 மட்டுமே உயர்ந்த நிலையில், இன்று ரூ.1,600 உயர்ந்துள்ளது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6000 உயர்ந்து ரூ.215 ஆகவும் ஒரு கிலோ ரூ,2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version