சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 26) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ. 13,670 -க்கும், ஒரு சவரன் தங்கம் ரு.1,09,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. திருமண விசேஷங்கள் நெருங்கும் வேளையில் இந்தத் திடீர் விலை உயர்வு நடுத்தரக் குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் சூழலுக்கும், உள்ளூர் சந்தை நிலவரத்திற்கும் இடையே ஒரு முரண்பாடான போக்கு இன்று காணப்படுகிறது. உலகளாவிய ரீதியில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 40 டாலர்கள் வரை சரிவைச் சந்தித்துள்ள போதிலும், இந்தியச் சந்தையில் விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியக் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததும், உள்ளூர் சந்தையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்ததுமே காரணமாக பார்க்கப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனையாகிறது.
