தங்கம் விலை சவரனுக்கு ரூ.22,800 வரை குறைந்த நிலையில், மீண்டும் நேற்று முதல் உயரத் தொடங்கியுள்ளது. அதனடிப்படையில் இன்றும் (பிப்.4) சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கும் சவரன் ரூ.5040 அதிகரித்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் 11 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சில் உறைய வைத்தது.
இருப்பினும், கடந்த 30ம் தேதி முதல் தங்கம் விலை குறைய தொடங்கியது. 30ம் தேதி அன்று தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 26,800க்கு விற்பனையானது. இதேபோல் 31ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1 லட்சத்து 19,200க்கு விற்பனையானது. அதே நேரத்தில் கடந்த 30ம் தேதி, 31ம் தேதி, 1ம் தேதி (தங்கம் மார்க்கெட் விடுமுறை), தொடர்ந்து நேற்று என 3 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.22,800 குறைந்தது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தங்க விலையில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் (பிப்.02) காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.950 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.7,600 குறைந்து ரூ.1,11,600-ஆக உள்ளது. கடந்த 3 நாட்களில் தங்க விலை மொத்தம் ரூ.22,800 வரை சரிந்தது.
ஆனால் நேற்று முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து சவரன் ரூ.1 லட்சத்து 12,240-க்கும், ஒரு கிராம் ரூ.14,030-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (பிப்.4) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.630 உயர்ந்து ரூ.14,900க்கும் சவரன் ரூ.5040 அதிகரித்து ரூ.1,19,200க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று ஒரு கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.320க்கும், ஒரு கிலோ ரூ.20,000 உயர்ந்து ரூ.3,20,000க்கும் விற்பனியாகிறது,
