சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று செவ்வாய்  (பிப்.10)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கும், சவரன் ரூ.800 உயர்ந்து ரூ. 1,20,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (பிப்.11)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,120க்கும், ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,20,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version