சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.
இதனிடையே நேற்று காலை தங்கம் விலை குறைந்திருந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,25,200-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,650-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,23,720 -க்கும், கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,465-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,200-க்கும், சவரனுக்கு ரூ.2,100 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,21,600 -க்கும், விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ரூ.295-க்கும். ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
