கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, குறையத் தொடங்கி உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.92.000-க்கு விற்பனையானது.
இந்தநிலையில், இன்று (நவ. 21) தங்கம் விலை மேலும் குறைந்து ஒரு சவரன் மீண்டும் ரூ.92,000-க்கு கீழ் சென்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.11,460-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து, ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளி விலையைப் பொருத்தவரை இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.169-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,69,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
