சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

தாறுமாறாக எகிறி வரும் தங்கம் விலை, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிலையற்ற தன்மையால், உலக நாடுகள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருவதே, இந்த நிலைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280க்கும், கிராமுக்கு ரூ. 160ம் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,16,480க்கும், ஒரு கிராம் ரூ.14,560க்கும் விற்பனை ஆனது. இந்தநிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(பிப்.16) கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,440-க்கும், பவுனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் 1,15,520-க்கும் விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.265-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து  ரூ.2 லட்சத்து 650க்கும் விற்பனையாகிறது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version