சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.

அதன்படி சென்னையில் நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. (ஜன.4) தங்கம் விலை ரூ.1,00,800க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.12,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,01,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.80 உயர்ந்து ரூ. 12,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.265க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.8000 உயர்ந்து ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் நேற்று, ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு ரூ.257க்கும், கிலோ வெள்ளி ரூ. 2,57,000 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version