சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 27) அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களின் எதிரொலியாக, தமிழகத்தில் சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.14,230-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் ஏறுமுகத்தை நோக்கிச் செல்வது நகை வாங்குவோரைச் சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100- உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.800-ம், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது. இன்று காலை சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று சரிவுடன் காணப்பட்ட போதிலும், வர்த்தக நேரத்தின் பிற்பாதியில் மீண்டும் விலை உயரத் தொடங்கியதே இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version