மிழக வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரம்

அதிகபட்ச மழை: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் அதிகபட்சமாக 163.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வெப்பநிலை: அதிகபட்சமாக வேலூரில் 40.3°C வெப்பமும், சமவெளிப்பகுதியில் குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 22.2°C வெப்பமும் பதிவாகியுள்ளது.

மழை முன்னறிவிப்பு (மே 19 –  25)

மே 19 (இன்று): நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

மே 20 & 21: நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

மே 22 முதல் 25 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் நிலவரம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37°C முதல் 39°C வரை இருக்கக்கூடும்.

வெப்பநிலை எச்சரிக்கை: மே 23 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3°C வரை குறைய வாய்ப்புள்ளது. எனினும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version