தமிழக முதலமைச்சர் நாளை (மே 29, 2025) சென்னை தலைமைச் செயலகத்தில் “எளிமை ஆளுமை” திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அரசு செயல்பாடுகளைத் திறம்பட மேம்படுத்துவதோடு, குடிமக்களுக்குத் தேவையான சேவைகளை ஆன்லைன் மூலம் பெறும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பல்வேறு முக்கிய சான்றிதழ்கள் மற்றும் உரிமங்களை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பெற முடியும். அவற்றில் சில:

* சுகாதார சான்றிதழ்

* பொது கட்டிட உரிமம்

* பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி உரிமம்

* மகளிர் இல்லங்களுக்கான உரிமம்

* சொத்து மதிப்பு சான்றிதழ்

* முதியோர் இல்லங்கள் உரிமம்

* நன்னடத்தை சான்றிதழ்

* அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகியவை அடங்கும்.

பொதுமக்கள் அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை எளிதில் ஆன்லைன் மூலம் பெறும் வகையில் இத்திட்டம் சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு சேவைகளை எளிமையாக்கி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version