Chennai High Court: உத்தரவை அலட்சியப்படுத்திய சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விருகம்பாக்கம், லம்பேர்ட் நகர் பகுதிகளில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை இடிக்க வேண்டும் என தாமஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் விதிமீறல் கட்டிடங்களாஇ சீல் வைக்க உத்தரவிட்டது. ஆனால், இதை மாநகராட்சி அலுவலர்கள் செயல்படுத்தவில்லை.

இந்த விழக்கு விசாரணைக்கு வந்தபோது மீண்டும் விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி சுந்தர மோகன், விதில்மீறல் கட்டிடங்கள் தொடர்பாக 2023ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததை சுட்டிக்காட்டினர். உத்தரவை செயல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கொடுத்த நீதிபதிகள், குறிப்பிட்ட காலத்தில் உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால், சென்னை மாநகராட்சி கமிஷ்னர், 10வது மண்டல நிர்வாகி பொறியாளர், கோடம்பாக்கம் நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடடிவைக்கை எடுக்கப்படும் என்றும் எதிர் காலத்தில் இதுபோல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம் காட்டாமல் கவனமுடை செயல்பட வேண்டும் என்றும் எச்சரிப்பதாக கூறியுள்ளனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் இந்த உத்தரவால் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர். வழக்கில் சீல் வைக்கப்படும் கட்டிடங்களின் உரிமையாளர்கள் மீண்டும் புதிய கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version