Close Menu
    What's Hot

    உலகக்கோப்பை கால்பந்து இன்று முதல் அரையிறுதி: ஐரோப்பிய ஜாம்பவான்கள் பிரான்ஸ் – ஸ்பெயின் மோதல்!

    ரூ.100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு: திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

    கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: தனது பிறந்தநாளில் விருதைப் பெற்றார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பழவேற்காட்டில் பயங்கரம்: வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை! 15 சவரன் நகைகள் கொள்ளை!
    தமிழ்நாடு

    பழவேற்காட்டில் பயங்கரம்: வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை! 15 சவரன் நகைகள் கொள்ளை!

    Editor web1By Editor web1July 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 07 14 06h36m05s879
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், முதிய தம்பதியர் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, 55 வயது பெண்ணைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, 15 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    பழவேற்காடு பழைய பேருந்து நிலையம் அருகே ராதாகிருஷ்ணன் – வனஜா (55) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுக்குத் திருமணமாகித் தனித்தனியே வசித்து வருவதால், இந்த முதிய தம்பதியினர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். ராதாகிருஷ்ணன் வீட்டின் அருகிலேயே மளிகைக் கடை நடத்தி வர, வனஜா வீட்டிலிருந்தபடியே மாவு வியாபாரம் செய்து வந்துள்ளார்.

    வழக்கம் போல காலையில் கடையில் இருந்த தனது கணவருக்குத் தேநீர் கொடுத்துவிட்டு வனஜா வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பிற்பகலில் மளிகைக் கடையைப் பூட்டிவிட்டு ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கே வனஜா கழுத்தில் கத்திக் குத்துப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறித் துடித்துள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

    Screenshot 2026 07 14 063714

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், வனஜா தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல், மாவு வாங்குவது போல நடித்து வீட்டிற்குள் புகுந்துள்ளது தெரியவந்தது. பின்னர், வனஜாவின் கழுத்தில் கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு, அக்கும்பல் தப்பியோடியுள்ளது தெரியவந்துள்ளது.

    சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் முக்கியத் தடயங்களைச் சேகரித்தனர். பின்னர் வனஜாவின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகப் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இக்கொலைச் சம்பவம் குறித்துத் திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து, தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசித் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தத் துணிகரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரும் 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க திட்டம்!
    Next Article ‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் தோற்றம்: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திர வீடியோ வெளியீடு!
    Editor web1
    • Website

    Related Posts

    ரூ.100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு: திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

    July 14, 2026

    கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: தனது பிறந்தநாளில் விருதைப் பெற்றார்!

    July 14, 2026

    வரும் 16ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்க திட்டம்!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக்கோப்பை கால்பந்து இன்று முதல் அரையிறுதி: ஐரோப்பிய ஜாம்பவான்கள் பிரான்ஸ் – ஸ்பெயின் மோதல்!

    ரூ.100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கு: திமுக நிர்வாகி அரசகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

    கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: தனது பிறந்தநாளில் விருதைப் பெற்றார்!

    ‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் தோற்றம்: ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கதாபாத்திர வீடியோ வெளியீடு!

    பழவேற்காட்டில் பயங்கரம்: வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை! 15 சவரன் நகைகள் கொள்ளை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.