திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவாா்த்தையை திமுக தொடங்கியுள்ளது. இதனிடையே முதலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுடன் திமுக தேர்தல் குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜவாஹிருல்லா, “திமுக கூட்டணியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட மமவுக்கு 5 இடங்களை கேட்டுள்ளோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகக் கூறியுள்ளனர். இந்த முறையும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளோம். அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம், முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சி, இந்த முறை தங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதுடன், முதல் கட்டப் பேச்சுவார்த்தையிலும் இதனைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், 200 தொகுதிகளுக்கு மேல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற முனைப்பில் திமுக இருப்பதால், தோழமைக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க வாய்ப்பில்லை என்றே அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version