தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தவெகவுடன் இணைந்துவிட்டது. இதனையடுத்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்து வரும் நிலையில், ரஜினிகாந்தின் இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் போது ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், “நீங்கள் வெற்றி பெறும் நேரங்களில் மட்டுமல்ல, இது போன்ற இக்கட்டான காலங்களிலும் ஒரு நண்பனாக நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” என்று உருக்கமாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கடந்து இருவருக்கும் இடையே உள்ள நீண்ட கால நட்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பு, திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
