2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலமான 118 இடங்கள் கிடைக்கவில்லை என்றால், தமிழக அரசியல் களம் ஒரு ‘தொங்கு சட்டமன்ற  நிலையை நோக்கிச் செல்லும். இந்நேரத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய தனிப்பெரும் கட்சி  என்ற அடிப்படையில், தமிழக வெற்றி இகழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது. ஜனநாயக மரபுப்படி, ஒரு நிலையான ஆட்சியைத் தர முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் பட்சத்தில், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க உரிமை கோரலாம்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று விஜய் பதவியேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்குக் குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்படும். இந்தச் சூழலில், அவர் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க வேண்டும். 234 உறுப்பினர்களைக் கொண்ட அவையில், வாக்கெடுப்பின் போது போதிய உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 118 என்ற எண்ணிக்கையைத் தொட்டால் மட்டுமே அவரது அரசாங்கம் நிலைபெறும். இதுவே ஒரு புதிய கட்சியின் அரசியல் பலத்தைப் பரிசோதிக்கும் மிக முக்கியமான கட்டமாக அமையும்.

மெஜாரிட்டியை நிரூபிக்கத் தேவையான இடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில், விஜய் மற்ற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியிருக்கும். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள்  மூலமாகவோ அல்லது சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடனோ அவர் ஆட்சியைத் தக்கவைக்க முயலலாம். தவெக-வின் கொள்கைகளுக்கு இணக்கமான கட்சிகளுடன் கைகோர்ப்பது அல்லது ‘வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளின் உதவியைப் பெறுவது என விஜய்க்கு முன்னால் பல சவாலான அரசியல் நகர்வுகள் காத்திருக்கும்.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version