பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின், விஜய் – த்ரிஷா பற்றிய விமர்சனங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருடைய பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து கொண்டிருக்கின்றன. தவெக கட்சியினர் மட்டுமல்லாமல் திமுகவை சார்ந்தவர்களும் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய பேச்சை கண்டித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், விஜய் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஏதாவது பிரச்சனை வந்தால் விஜய் ஓடி ஒளிந்து கொள்கிறார். நாங்க எல்லா பிரச்சனைக்கும் பதில் சொல்றோம் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறாரே? அதுப்பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர்.

அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காத செங்கொட்டையன், நயினார் நாகேந்திரனின் விமர்சனம் பற்றியும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதெல்லாம் ஒரு கட்சியா. அவரெல்லாம் ஒரு ஆளா என கடுமையாக பதிலளித்துள்ளார். இதன் மூலமான நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சால், தவெக நிர்வாகிகள் கடுமையான அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version