தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்த பயணம் மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்
இந்தநிலையில், “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பயணத்தின் அடுத்தக்கட்டமாக வரும் 21–26 தேதிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இபிஎஸ் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு அறிந்து கொள்ளவும், கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வரவிருக்கும் அரசியல் நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளார்.
சுற்றுப்பயண அட்டவணை:
21.2.2026 (சனி) – திருவள்ளூர் தெற்கு – ஆவடி, அம்பத்தூர் (மாலை 5 மணி)
22.2.2026 (ஞாயிறு) – திருவள்ளூர் கிழக்கு – மாதவரம் (மாலை 4 மணி)
பொன்னேரி (மாலை 5 மணி)
25.2.2026 (புதன்) – திருவள்ளூர் மத்தியம் – மதுரவாயல் (மாலை 5 மணி)
26.2.2026 (வியாழன்) – செங்கல்பட்டு மேற்கு – தாம்பரம் (மாலை 4.30 மணி).
சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
