Close Menu
    What's Hot

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ!
    தமிழ்நாடு

    ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது ஜாக்டோ ஜியோ!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    strike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசுத் துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

    மேலும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 18ஆம் தேதி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றால் அந்த நாளுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இதையடுத்து, இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஏற்கெனவே ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.

    இந்த நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், தியோடர் ராபின்சன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    அப்போது, தங்களின் அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தினர். அப்படி நிறைவேற்றாதபட்சத்தில் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.

    அதற்கு முன்பாக, டிசம்பர் மாதம் 13 – ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும், டிசம்பர் 27- ஆம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடத்துவது என்றும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    திமுக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற மறுப்பதாகவும் நாங்கள் அறிவித்திருப்பது தேர்தல் நெருக்கடி அல்ல; எங்கள் தேவைக்கான நெருக்கடி என்றும் அவர்கள் கூறினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று சென்னை – அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்
    Next Article கொட்டும் கனமழை… ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
    Editor TN Talks

    Related Posts

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.