தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் நியமித்து, முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏழை எளிய மக்களின் வாழ்விட மேம்பாட்டிற்காகச் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய அமைப்பாகும்.

குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பான அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்குதல், ஆபத்தான அல்லது தகுதியற்ற உறைவிடங்களில் வசிப்பவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மறுகுடியமர்வு செய்தல், நகர்ப் புறங்களில் வீட்டு வசதி தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இந்த முக்கியப் பொறுப்பில் தவெக நிர்வாகி கு.ப.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், தவெக சார்பில் லால்குடி தொகுதியில் கு.ப.கிருஷ்ணன் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version