விஜயகாந்த் இல்லாத முதல் பொதுத் தேர்தலை பிரேமலதா தலைமையிலான தேமுதிக இந்த முறை களமிறங்கவுள்ளது. தேமுதிகவுக்கு வெறும் 2% வாக்குகள் மட்டுமே இருப்பதாக கணிக்கப்படும் நிலையில், திமுக, அதிமுக, தவெக என மும்முனைகளில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த தகவல் வெளியாகின்றன.

இதற்கு காரணம், தங்களின் பலத்தைவிட, தங்களை எதிரணிக்கு செல்லவிடாமல் தடுப்பதில்தான் இந்த கட்சிகள் குறியாக இருக்கின்றன. இதை புரிந்துகொண்ட பிரேமலதா, அதிக இடங்களைப் பேரம் பேசி வாங்கும் முனைப்பில் இழுத்தடித்து கொண்டிருக்கிறது. இதேபோல், ஒரு ராஜ்ய சீட்டையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தேமுதிக நினைக்கிறது. இருப்பினும் கூட்டணி குறித்த முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

திமுகவுடன் கூட்டணி வைத்தால் எளிதாக தேமுதிக வெற்றி சட்டசபை போக முடியும் என்றாலும், விஜயகாந்த் தொடக்கத்திலிருந்தே திமுகவை எதிர்த்து அரசியல் செய்தவர் என்பதால், மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பது அக்கட்சியின் அடிப்படை அடையாளத்தையே கேள்விக்குறியாக்கிவிடக்கூடும் என்பதால் பிரேமலதா மௌனமாகவே உள்ளார்.

இந்தநிலையில், டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக கனிமொழி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடனும் கனிமொழி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேமலதா முதலில் 20+1 தொகுதிகள் கேட்ட நிலையில்,தற்போது 8+1 வழங்க திமுக தலைமை இசைவு தெரிவித்துள்ளதாம். வரும் 3ம் தேதி கூட்டணி முடிவை அறிவிப்பேன் என பிரேமலதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version