பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு நீதிமன்றம் கொடுத்த பிறந்தநாள் பரிசு இது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களில் சிலர் அப்போதைய ஆட்சி காலத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகளின் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்பதால், காவல்துறையினர் வழக்கில் முழு ஈடுபாடு காட்டவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட 48 பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனர். விசாரணை தீவிரமடைந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் வசந்தராஜன் ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இதில் திருநாவுக்கரசு என்பவரின் செல்போனில் இருந்து பல பெண்களின் வீடியோக்கள் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோக்கள் கைப்பற்றப்பட்டது. அதேப்போல சபரிராஜன் பயன்படுத்திய லேப்டாப்பில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச உரையாடல்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டது.

இந்த வழக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் நடைபெற்று வந்தது. 6 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று (13.05.2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுன் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர். அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என எடப்பாடி பழனிசாமியும், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருப்பதாக ஸ்டாலினும் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த ”அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் தவறு நடந்தது. ஆனால் புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்களின் விவரத்தை வெளியில் வந்து விடும் என்ற பயத்திலும் அதிமுக கட்சி நிர்வாகிகளின் நெருங்கிய தொடர்பு உடையவர் என்பதால் இழுத்தடிக்கப்பட்டதாக கூறினார்.

”மேலும் அப்போதைய அதிமுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி காலத்தில் நடந்த அறுவெறுக்கதக்க செயல்.மேலும் இந்த வழக்கில் அவருடைய கட்சியை சேர்ந்தவர்களின் நெருங்கியவர்கள் இருப்பதால் வழக்கை முடக்குவதற்கும் , சரியான விசாரணையில் இல்லாமல் கிடப்பப்பில் போடப்பது. இது சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு எடப்பாடிக்கு நீதிமன்றம் கொடுத்த பிறந்தநாள் பரிசு இது” எனவும் விமர்சித்துள்ளார்.

’முக்குலத்தோர் புலிப்படை’ என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ள கருணாஸ், கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் இபிஎஸ், ஓபிஎஸ் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனரா என்பது கேள்விக்குறியே என கூறியதோடு, இனி அரசியலில் ஈடுபடபோவதில்லை எனவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version