கரூர் தெவக பிரச்சாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று முன் தினம் கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவரை பார்க்க ஏராளமான பெண்கள், இளைஞர்கள் என பலர் குவிந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் விஜய் உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, மக்கள் கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் தள்ளூமுள்ளு ஏற்பட்டது.
பலர் கூட்டநெரிசலில் சிக்கியும், மயக்கம் ஏற்பட்டும் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இதனால் தவெக பிரச்சாரத்தில் இருந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த 65 வயதான பெண் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவெக பிரச்சாரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.