சென்னையில் மது பாரில் ஏற்பட்ட தகராறில் அதிவேகமாக காரை மோதச் செய்த சம்பவத்தில் இளம் பெண் உயிரிழந்தநிலையில், படுகாயமடைந்த சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள மது பாரில் நடனம் ஆடிய போது மே 31ம் தேதி இரவு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளம்பெண் யான்சி தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருதரப்பினரையும் பவுன்சர்கள் வெளியேற்றி உள்ளனர். வெளியே வந்த போதும், இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலையடுத்து, யான்சி மற்றும் அவரது நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

இருப்பினும், யான்சியை பின்தொடர்ந்தவர்கள், இருசக்கர வாகனத்தை வேகமாக இடித்து தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட ஜான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி இந்த சிறுமியும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கோயம்பேடு போலீசார், தனியார் மதுபான பாருக்கு சீல் வைத்தனர். தாக்குதல் தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version