சென்னையில் கண் தொற்றுநோய்களில் ஒன்றான ‘மெட்ராஸ் ஐ’ (Conjunctivitis) பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக Government Ophthalmic Hospital Egmore உட்பட பல தனியார் கண் மருத்துவமனைகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வருகை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

காலநிலை மாற்றம், தூசி மாசு மற்றும் வைரஸ் பரவல் போன்ற காரணங்கள் இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் விளக்குகின்றனர். மெட்ராஸ் ஐ என்பது கண் விழி மற்றும் இமைப்பகுதியை இணைக்கும் மென்மையான படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றாகும். இந்த தொற்று மிகவும் எளிதில் பரவக்கூடியது.

காற்றின் மூலம் மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் நோய் பரவ வாய்ப்பு அதிகம் என கண் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக கண்களில் எரிச்சல், சிவப்பு நிறம் தோன்றுதல், தொடர்ந்து நீர் வடிதல் மற்றும் காலை எழும்போது இமைகள் ஒட்டிக்கொள்வது போன்றவை காணப்படும்.

இவ்வாறான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அறிகுறிகள் தோன்றிய உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version