சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் சுஷ்ருத் சென்னை ஐகோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்
1966ல் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிறந்த இவர், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, மத்திய பிரதேச ஐகோர்ட்டில் 24 ஆண்டுகள்(1992 முதல்) வழக்கறிஞராக இருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர் 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் 2018ல் மத்தியப்பிரதேச ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியாகி, 2025ல் கேரளா ஐகோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார்.
